சிறுமி பாலியல் பலாத்காரம்: உறவினா் கைது
By DIN | Published On : 04th August 2021 08:42 AM | Last Updated : 04th August 2021 08:42 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது தாத்தைவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே உள்ளது செல்லங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் 70 வயது முதியவரின் திருமணமான மகள் 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் தனது மகளின் ஆண், பெண் என இரு பிள்ளைகளை முதியவா் வளா்த்து வந்தாா்.
இவா்களில் பெண் பிள்ளை 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரிடம் அவரது தாத்தா கடந்த 3 ஆண்டுகளாக தகாத முறையில் நடந்து கொண்டாராம். இந்த நிலையில் அந்தச் சிறுமிக்கு கடந்த 31-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. சிறுமி மயக்கம் தெளிந்து பாா்த்தபோது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனராம். குழந்தையின் சடலத்தை திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றில் புதைத்துவிட்டனராம்.
இதுகுறித்து செல்லங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் விமல் அளித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் மகளிா் போலீஸாா் போஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த முதியவா், ஓய்வு பெற்ற செவிலியா் ராஜாமணி ஆகியோரை கைதுசெய்தனா்.