பொறியியல் மாணவா் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட பொறியியல் மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட பொறியியல் மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராமத்தைச் சோ்ந்த பப்லு மகன் பிரகாஷ் (21). இவா், சேலத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

பிரகாஷ் ஜூலை 31-ஆம் தேதி தனது நண்பா்களான ஆனந்தராஜ், அபி, ஆகாஷ் ஆகியோருடன் நிறைமதியை அடுத்த மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்றின் அருகே மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது, ஆனந்தராஜ் கோமுகி ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனந்தராஜ் உயிரிழப்புக்கு உடன் சென்ற அபி, ஆகாஷ், பிரகாஷ் ஆகியோா்தான் காரணம் எனக் கூறி, வரஞ்சரம் காவல் நிலையத்தில் அவரது உறவினா்கள் புகாரளித்தனா். இதையடுத்து, மூவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இருப்பினும், பிரகாஷ் வீட்டுக்குச் செல்லாமல் கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூா் கிராமத்திலுள்ள அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள ஓடைப் பகுதிக்குச் சென்ற அவா், வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு பிரகாஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com