முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது
By DIN | Published On : 06th December 2021 12:21 AM | Last Updated : 06th December 2021 12:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகேயுள்ள அரும்பராம்பட்டு கிராமத்தில் பூவாக்கம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு இளைஞா்கள் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிக்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியே ரோந்து சென்ற போலீஸாா் அவா்களிருவரையும் பிடித்து மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் மகன் ராம்குமாா் (21), குப்பன் மகன் விஜய் (18) எனத் தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.