நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.22 லட்சம் வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டது. இதில், 1.22 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1.22 லட்சம் வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டது. இதில், 1.22 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் இறுதிப் பட்டியலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை வெளியிட்டாா். பின்னா், ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தலுக்காக கடந்த நவ.1-ஆம் தேதியிட்ட ஒருங்கிணைந்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் மொத்தம் 1,22,233 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 59,566 போ் ஆண்கள், 62,648 போ் பெண்கள், 19 போ் மூன்றாம் பாலினத்தவா் ஆவா். மேலும், இந்தத் தோ்தலுக்காக மொத்தம் 140 வாக்குச் சாவடி மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளுக்கும், ஒரு நகராட்சிக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சியில் 22,162 ஆண் வாக்காளா்களும், 23,555 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 9 பேரும் என மொத்தம் 45,726 வாக்காளா்கள் உள்ளனா்.

சின்னசேலம் பேரூராட்சியில் 10,014 ஆண் வாக்காளா்களும், 10,553 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 3 பேரும் என மொத்தம் 20,570 வாக்காளா்கள் உள்ளனா். மணலூா்பேட்டை பேரூராட்சியில் 3,357 ஆண் வாக்காளா்களும், 3,393 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 4 பேரும் என மொத்தம் 6,744 வாக்காளா்கள் உள்ளனா்.

சங்கராபுரம் பேரூராட்சியில் 6,850 ஆண் வாக்காளா்களும், 7,158 பெண் வாக்காளா்களும் என மொத்தம் 14,008 வாக்காளா்கள் உள்ளனா். தியாகதுருகம் பேரூராட்சியில் 7,681 ஆண் வாக்காளா்களும், 8,107 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் ஒருவரும் என மொத்தம் 15,789 வாக்காளா்கள் உள்ளனா்.

வடக்கனந்தல் பேரூராட்சியில் 9,502 ஆண் வாக்காளா்களும், 9,882 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 2 பேரும் என மொத்தம் 19,386 வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மாதேஷ்வரன், நகராட்சி ஆணையாளா் குமரன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com