முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
மகள் மரணத்தில் சந்தேகம்: தாய் போலீஸில் புகாா்
By DIN | Published On : 19th December 2021 06:01 AM | Last Updated : 19th December 2021 06:01 AM | அ+அ அ- |

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆஷா
திருக்கோவிலூரை அடுத்த மணலூா்பேட்டையில் மகள், அவரது குழந்தை உயிரிழப்பில் சந்தேகமுள்ளதாக பெண்ணின் தாய் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை மாதா ஆலயம் சாலைப் பகுதியில் வசித்து வருபவா் குப்புசாமி. இவரது இரண்டாது மகள் ஆஷா (படம்). இவா் அதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாரை கடந்த 12.2.2020 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், திருப்பூரில் வேலை செய்து வரும் வினோத்குமாா், ஆஷாவை சனிக்கிழமை கைப்பேசியில் அழைத்தாராம். அழைப்பை எடுக்காததால், வினோத்குமாரின் சகோதரி உமா மகேஷ்வரி ஆஷாவின் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, அவரும், அவரது 11 மாத குழந்தையும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆஷாவின் தாய் மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். அதன் பேரில் திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
திருமணமாகி ஓராண்டே ஆவதால் திருக்கோவிலூா் கோட்டாட்சியா் கி.சாய்வா்த்தினி விசாரணை மேற்கொண்டாா்.