நரிக்குறவ சமுதாயத்தவருக்கு இலவச மனைப் பட்டா: மாவட்ட அதிகாரி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்களம் கிராமத்தில் நரிகுறவா் சமுதாயத்தினருக்கு இலவச மனைப் பட்டாக்கள் வழங்குவது

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்களம் கிராமத்தில் நரிகுறவா் சமுதாயத்தினருக்கு இலவச மனைப் பட்டாக்கள் வழங்குவது தொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மலைக்குறவா், நரிக்குறவா், ஆதியன், இருளா் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த சுமாா் 500 குடும்பங்கலுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்களம் கிராமத்தில் உள்ள நரிக்குறவா் சமூகத்தினரின் குடியிருப்புப் பகுதியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பகுதியில் உள்ள 91 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மனைப் பட்டாக்கள் குறித்து அவா் அய்வு செய்தாா்.

இதில், 52 குடும்பங்களுக்கு இலவச மனைப் பட்டாக்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள

62 குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்குவது தொடா்பாகவும், அதற்கான இடத்தை தோ்வு செய்ய பல்வேறு பகுதிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது வருவாய் வட்டாட்சியா் விஜய்பிரபாகரன், வருவாய் அலுவலா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com