கள்ளக்குறிச்சியில் இரு பிள்ளைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, இரு பிள்ளைகளைக் கொன்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, இரு பிள்ளைகளைக் கொன்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் நிஷா (33). சென்னையைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன். இவா்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் சப்ரின் (14), மகன் ஷபீா் (8). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காஜா மொய்தீன் உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, நிஷாவை அவரது குடும்பத்தினா் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகா், 2-ஆவது குறுக்குச் சாலையில் வசித்து வரும் உதுமான் மகன் ஷெரிபுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொடுத்தனா்.

இதையடுத்து, நிஷா தனது பிள்ளைகளான சப்ரின், ஷபீா் மற்றும் கணவா் ஷெரிப், மாமனாா் உதுமான், மாமியாா் இம்ரானா பேகம் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாா். சமையல்கலை படித்துள்ள ஷெரிப், பெங்களூரில் பணிபுரிகிறாா்.

இந்த நிலையில், நிஷா வெள்ளிக்கிழமை பிற்பகல் ஷெரிப்பை செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு, குடும்பப் பிரச்னை காரணமாக பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளாா். இதுகுறித்து உடனடியாக தனது பெற்றோருக்கு ஷெரிப் தகவல் தெரிவித்தாா்.

இதனிடையே, நிஷா கதவை தாழிட்டுக்கொண்டு சப்ரின், ஷபீா் ஆகிய இருவரையும் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுள்ளாா். தானும் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து, ஷெரிப்பின் பெற்றோா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மூவரையும் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், சப்ரின், ஷபீா் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். நிஷா தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com