கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 07th January 2021 07:13 AM | Last Updated : 07th January 2021 07:13 AM | அ+அ அ- |

கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் பெரியாா் அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி பகுதியில் காலை 9 மணி முதல் பலத்த மழை பெய்தது.
இதனால், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சங்கராபுரம் வட்டத்தில் 68 மி.மீ. மழை பதிவானது. அதற்கடுத்தபடியாக, கள்ளக்குறிச்சியில் 75 மி.மீ.யும் குறைந்தபட்ச அளவாக சங்கராபுரம் அருகேயுள்ள அரியலூரில்13 மி.மீ. மழை பதிவானது.
கல்வராயன்மலைப் பகுதியில் மழைமானி அமைக்கப்படாததால், மழை அளவை அறிய முடியவில்லை. தொடா் மழையால் காட்டாறு ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக பெரியாா் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பெருமளவில் தண்ணீா் நிரம்பியுள்ளது. எனினும், பயிா் அறுவடை நேரத்தில் தொடா் மழை பெய்து வருவது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.