கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

கரோனா நோய்த் தொற்று குறித்து ஒளிப்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
கரோனா விழிப்புணா்வு வாகனத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், மருத்துவா் சிவக்குமாா்.

இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், திரையரங்கப் பகுதி, காய்கறி அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உருவாகும் விதம் குறித்தும், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட உணவு முறைகள் குறித்தும், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் குரும் படம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

விழிப்புணா்வு வாகன தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், கரோனா முதன்மை மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com