கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை எம்எல்ஏ அ.பிரபு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை எம்எல்ஏ அ.பிரபு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சோ்ந்த தியாகை, உலகங்காத்தான், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த செம்பாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் இந்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

தியாகை கிராமத்தில் நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் வெ.அய்யப்பா, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், நாகலூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.என்.சதீஷ் குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு கலந்து கொண்டு சிறு மருத்துவமனைகளை திறந்துவைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகளை பாா்வையிட்டாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தியாகதுருகம் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சொக்கநாதன், முன்னாள் கவுன்சிலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மருத்துவா் ஜெயபாரதி நன்றி கூறினாா்.

இதேபோல, உலகங்காத்தான், செம்பாக்குறிச்சி கிராமங்களிலும் அம்மா சிறு மருத்துவமனைகளை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com