அரசு அலுவலா் வீட்டில் திருட்டு

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் குமாரதேவன் (36). கள்ளக்குறிச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் இவா், தற்போது கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

குமாரதேவன் கடந்த 21-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான தண்டலை கிராமத்துக்குச் சென்றாா். இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவிலிருந்த 9 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குமாரதேவன் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com