லாரி மோதியதில் இளைஞா் பலி
By DIN | Published On : 19th July 2021 11:52 PM | Last Updated : 19th July 2021 11:52 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் இளைஞா் பலியானாா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுவங்கூரைச் சோ்ந்தவா் சேரன் மகன் பச்சையப்பன் (19). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் சொந்த ஊரான சிறுவங்கூருக்கு செல்ல, சென்னையிலிருந்து மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா்.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி மேம்பாலம் அருகே வந்த போது, இவரது மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில், பச்சையப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநரான சங்கராபுரம் அருகே வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரத்குமாரை (30) தியாகதுருகம் போலீஸாா் கைது செய்தனா்.