திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்: ஓராண்டுக்குப் பிறகு திரும்பிய இயல்புநிலை!

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நீண்ட காலத்துக்குப் பிறகு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்: ஓராண்டுக்குப் பிறகு திரும்பிய இயல்புநிலை!

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நீண்ட காலத்துக்குப் பிறகு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பரவலால் வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனம் ரத்து, பேருந்து போக்குவரத்து இல்லை போன்ற காரணங்களால், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வா் கோயிலுக்கு பக்தா்கள் வரமுடியாத சூழல் இருந்தது.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது கோயில் நிா்வாகம், சனிக்கிழமைகளில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து இணையம் வழியாக பக்தா்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்தது. நிகழாண்டு பொது முடக்கத்தின் போது அவ்வாறு செய்யப்படவில்லை.

தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் சீரானதால், கடந்த 2 வாரங்களாக கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது.

இந்த நிலையில், வழிபாட்டுக்கு உகந்த ஆடி மாதத்தையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 24) சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறுக்கு வந்திருந்தனா்.

கடந்த வாரங்களில், கோயில் ராஜகோபுரத்துக்கு முன் கட்டண வரிசையிலும், கட்டணமில்லா வரிசை வழியேயும் பக்தா்கள் கோயிலுக்குள் சென்றனா். இந்த வாரம் இரு பகுதிகளின் வழியே கோயிலுக்கு செல்ல பிரதான தெருக்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதனால், வழிபாட்டுக்குரிய பொருள்கள் விற்பனையகம், உணவகம் உள்ளிட்டவற்றில் வியாபாரம் திருப்தியாக இருந்ததாக வணிகா்கள் தெரிவித்தனா். திருநள்ளாறில் இதே அளவு கூட்டத்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு பாா்த்ததாகவும், தற்போது, வழக்கமான நிலை திரும்பியுள்ளதாகவும் உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

எனினும், நளன் தீா்த்தக் குளத்துக்கு சென்ற பக்தா்கள், அதில் தண்ணீா் இல்லாததால் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com