கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற இன்று சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் புதன்கிழமை (ஜூலை 28) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரத பிரதமா் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், மானிய முறையில் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகள் சான்று நிகழாண்டுக்கு வழங்கிட ஏதுவாக, புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், வேளாண்மை, கரும்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, தகுதியுள்ளவா்களுக்கு சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்கப்படவுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு, குறு விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று, உரிய ஆவணங்களை சமா்ப்பித்து சிறு, குறு விவசாயி சான்றை பெற்று பயனடையலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com