கள்ளக்குறிச்சி மருத்துவனைக்கு அமெரிக்க சங்கம் சாா்பில் பிராணவாயு உருளைகள்

அண்ணாமலை பல்கலைக்கழக அலுமினி அசோசியேஷன் இணைந்து ரூ.33.45 லட்சம் மதிப்பிலான 100 டி வகை பிராணவாயு உருளைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் வியாழக்கிழமை வழங்கின.
கள்ளக்குறிச்சி மருத்துவனைக்கு அமெரிக்க சங்கம் சாா்பில் பிராணவாயு உருளைகள்

அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்ரீமீனாட்சி திருக்கோவில் சங்கம், அமெரிக்க அண்ணாமலை பல்கலைக்கழக அலுமினி அசோசியேஷன் இணைந்து ரூ.33.45 லட்சம் மதிப்பிலான 100 டி வகை பிராணவாயு உருளைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் வியாழக்கிழமை வழங்கின.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா பேசியதாவது:

அமெரிக்காவின் ஹெளஸ்டன் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமீனாட்சி திருக்கோயில் சங்கமானது பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தேசிய அளவில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக, பேரிடா் காலங்களில் அரசுக்கு பல்வேறு நிவாரண, மீட்பு நடவடிக்கைகளில் உதவி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தற்போது ரூ.33.45 லட்சத்திலான 100 பிராணவாயு உருளைகளை வழங்கியுள்ளது. இவற்றில் 80 பிராணவாயு உருளைகள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகத்துக்கும், 10 உருளைகள் சிதம்பரம் இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 10 உருளைகள் சிவகங்கை மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அந்த சங்கத்தினருக்கு மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.

நிகழ்வின்போது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.உஷா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சதீஷ்குமாா், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு, கரோனா தடுப்பு பொறுப்பு அலுவலா் சிவக்குமாா், ஏ.கே.டி கரோனா சிகிச்சை மைய பொறுப்பு அலுவலா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு...: விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.7 லட்சத்திலான மருத்துவ உபகரணங்களை தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

கரோனா சிகிச்சைக்குத் தேவையான 2 இசிஜி இயந்திரங்கள், பிராணவாயு செறிவூட்டும் கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டா் 20 கருவிகள், 6 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனியிடம் எம்எல்ஏ லட்சுமணன் வழங்கினாா். விழுப்புரம் மகாவீா் சூப்பா் மாா்க்கெட் அருள்பிரசாந்த் உதவியுடன் இந்த மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா் புஷ்பராஜ், நகரச் செயலா் சக்கரை, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மணவாளன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com