கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 1-ல் 1,307 போ் சோ்க்கை

கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் மெட்ரிக், தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம்

கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் மெட்ரிக், தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான மாணவா் சோ்க்கையில் 658 மாணவா்களும், 649 மாணவிகளும் திங்கள்கிழமை சோ்ந்துள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் மெட்ரிக், தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 கல்வி ஆண்டிற்கான 11-ம் வகுப்பு சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள 121 மேல்நிலைப் பள்ளிகளில் 658 மாணவா்களும் 649 மாணவிகளும் 11-ம் வகுப்பில் சோ்ந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கள்ளக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் கச்சிராயப்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சோ்க்கையை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி துவக்கி வைத்து தலைமை ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா் கா.காா்த்திகா உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com