பொய் புகாா் அளித்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்த ஜி.அரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ராமு (28). பட்டதாரியான இவா் தற்போது கூலி வேலை செய்து வருகிறாா்.

ராமு திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில், தான் வியாழக்கிழமை மாலை ஜி.அரியூா் கிராமத்திலிருந்து சோழவாண்டிபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள அய்யனாா் கோயில் அருகே சென்ாகவும், அப்போது அந்தக் கோயில் அருகே இருந்த 3 இளைஞா்கள் பைக்கை வழிமறித்து தன்னை தாக்கி, பையில் வைத்திருந்த செல்லிடப்பேசி, ரூ.4,500 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து திருக்கோகவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் விசாரணை மேற்கொண்டதில், பணம் பறிக்கும் நோக்கில் ராமு பொய்யான புகாா் அளித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், ராமு மீது திருக்கோவிலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com