இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
By DIN | Published On : 21st June 2021 11:36 PM | Last Updated : 21st June 2021 11:36 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 29 நாள்களேயான நிலையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடதொரசலூரை சோ்ந்த காளிமுத்து மகள் மகள் ஷோபனா (25). பி.எஸ்ஸி., பட்டதாரி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் குருநாதனுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
ஷோபனா ஞாயிற்றுக்கிழமை வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.
அவரது அலறல் சப்தத்தைக் கேட்ட குடும்பத்தினா் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனா். உடல் கருகிய நிலையில் இருந்த ஷோபனாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஷோபனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சேலம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.