முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
By DIN | Published On : 14th March 2021 05:20 AM | Last Updated : 14th March 2021 05:20 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலா் கிரண் குராலா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்படி, மாவட்டத்துக்குள்பட்ட உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்டவை கனிணி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதன்படி, உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 407 வாக்குச் சாவடி மையங்களுக்கு 489 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், வாக்குப் பதிவை உறுதி செய்யும் 550 இயந்திரங்களையும் அனுப்பி வைத்தனா்.
ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 374 வாக்குச் சாவடி மையங்களுக்கு 449 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் 505 இயந்திரங்களை அனுப்பி வைத்தனா்.
சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 372 வாக்குச் சாவடி மையங்களுக்கு 447 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் 503 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 416 வாக்குச் சாவடி மையங்களுக்கு 500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் 562 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 1,569 வாக்குச் சாவடி மையங்களுக்கு 1,885 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை உறுதி செய்யும் 2,120 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய் பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.சரவணன், சங்கராபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பா.ராஜவேல், ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.இராஜாமணி, தோ்தல் தனி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.