கள்ளக்குறிச்சியில் சீமான் பிரசாரம்
By DIN | Published On : 14th March 2021 05:21 AM | Last Updated : 14th March 2021 05:21 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தியாகதுருகம், சங்கராபுரம் தொகுதிக்கு உள்பட்ட சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
இந்தக் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முத்தமிழ்ச் செல்வி, சங்கராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டாா். கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திமுகவின் தோ்தல் அறிக்கை ஒரு வெற்று அறிக்கை. இலங்கையில் தமிழா் இனப் படுகொலை விவகாரத்தில் திமுக அக்கறை காட்டுவதுபோல நடிக்கிறது என்றாா் அவா்.