குடல்புழு நீக்க செயல்விளக்க முகாம்

தேவனாம்பட்டினம் கிராமத்தில் வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

தேவனாம்பட்டினம் கிராமத்தில் வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ், கடலூா் வட்டாரம், தேவனாம்பட்டினம் கிராமத்தில் முன்னோடி விவசாயி விநாயகம் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிா் சாகுபடியும், கால்நடை வளா்ப்பும் செய்து வருகிறாா். 50-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை பண்ணைய முறையில் வளா்த்து வருகிறாா். இங்கு வெள்ளாடுகளுக்கு குடல்புழு நீக்க செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) கென்னடி ஜெபக்குமாா் குடல்புழு நீக்க செயல் விளக்கத்தை தொடக்கி வைத்தாா். கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், கடலூா் வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து செய்யப்படும் பணிகளை விளக்கினாா். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் ப.சிலம்பரசன், உதவி பேராசிரியா் பி.முரளி ஆகியோா் வெள்ளாட்டுக் குட்டி பிறந்த 15-ஆம் நாளில் முதல்முறையாக குடல்புழு நீக்க மருந்தை அளிப்பதோடு, 30, 60 மற்றும் 90-ஆவது நாளில் ஒரு முறை குடல்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும். இதன் பிறகு ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறை குடல்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் வா.அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஏ.ராஜவேல் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com