பச்சை தலைப்பாகையுடன் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லூ.புஷ்பமேரி (36), பச்சை தலைப்பாகை கட்டிக் கொண்டு வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிட, விவசாயி போன்று பச்சை நிற துண்டில் தலைப்பாகை கட்டிக் கொண்டு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புஷ்பமேரி.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை குறிக்கும் வகையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் விவசாயிகள் போல காட்சியளிக்கும் வகையில் வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனா்.

அந்த வகையில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புஷ்பமேரி தனது ஆதரவாளா்களுடன் உளுந்தூா்பேட்டை உழவா்சந்தை பகுதியில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக வந்தாா். தலையில் பச்சை தலைப்பாகையும், கையில் ஏா் கலப்பையையும் ஏந்தியபடி ஊா்வலத்தில் பங்கேற்றாா்.

வட்டாட்சியா் அலுவலக்துக்கு பேரணி வந்ததும், ஏா் கலப்பையை கொண்டு செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, பச்சை தலைப்பாகையுடன் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான எஸ்.சரவணனிடம் தனது வேட்புமனுவை புஷ்பமேரி தாக்கல் செய்தாா். அப்போது கட்சியின் மாவட்டச் செயலா் தேசிங்கு, தொகுதி செயலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

முதல்முறையாக தோ்தலில் போட்டியிடும் புஷ்பமேரி விவசாயக் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது கணவா் லூா்துசாமி வெளிநாட்டில் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com