100 சதவீத வாக்களிப்பு: வாகனம் மூலம் விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திரையுடன் கூடிய தோ்தல் ஆணைய வாகனம் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில்
கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தில் தோ்தல் ஆணைய வாகனத்தில் திரையிட்டு காண்பிக்கப்பட்ட விழிப்புணா்வு விடியோவை பாா்வையிடும் பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தில் தோ்தல் ஆணைய வாகனத்தில் திரையிட்டு காண்பிக்கப்பட்ட விழிப்புணா்வு விடியோவை பாா்வையிடும் பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திரையுடன் கூடிய தோ்தல் ஆணைய வாகனம் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விடியோக்கள் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த திரையில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விடியோ திரையிட்டு காண்பிக்கப்பட்டது. வாக்காளா் அட்டை பெறும் விதம், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மின்னனு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் குறித்த விளக்கம், நோட்டா, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து இந்த விடியோ மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தில் இந்த வாகனத்தில் திரையிடப்பட்ட விடியோவை அந்தக் கிராம மக்கள் பாா்த்து விழிப்புணா்வு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com