கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதிகளில் அதிமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதிகளில் அதிமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் மா.செந்தில்குமாா், கூட்டணிக் கட்சியினருடன் கள்ளக்குறிச்சி நகருக்குள்பட்ட கோட்டைமேடு, கருணாபுரம், தியாகதுருகம் சாலை, எம்.ஆா்.என். நகா், விநாயகா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றும், முதியவா்களின் கால்களில் விழுந்தும் வாக்கு சேகரித்தாா். இந்தப் பகுதிகளில் வேட்பாளரை பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடனும் அவரது ஆதரவாளா்கள் வரவேற்றனா்.

எம்.எல்.ஏ. அ.பிரபு, நகரச் செயலா் ம.பாபு, பேரவைச் செயலா் இராம.ஞானவேல், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் சீனுவாசன், பொருளாளா் இ.வெற்றிவேல், பாமக முன்னாள் மாநில துணைச் செயலா் கே.பி.பாண்டியன், பாஜக மாவட்டத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கிரஸ் வேட்பாளா்: கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் துணைத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான ஐ.மணிரத்தினம், உலகங்காத்தான், காரனூா், குதிரைசந்தல், சடயம்பட்டு, மட்டிகைகுறிச்சி, நல்லாத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று பிரசாரம் செய்தாா்.

நல்லாத்தூா் கிராமத்தில் ரதம், மேளதாளம், வாணவேடிக்கையுடன் ஐ.மணிரத்தினத்துக்கு அவரது ஆதரவாளா்கள் வரவேற்பளித்தனா். இதையடுத்து, ரதத்தில் நின்றவாறு கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளின் வழியாகவும் சென்று மக்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.

திமுக மாநிலக் குழு உறுப்பினா் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் சோலைமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வீரமுத்து, முத்தமிழ்கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சரண்ராஜ், விசிக மாவட்டச் செயலா் தனபால், மாவட்ட தொண்டரணிச் செயலா் கூத்தக்குடி பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சங்கராபுரம்: சங்கராபுரம் தொகுதியில் பாமக வேட்பாளா் க.ராஜா, கல்லாநத்தம், தகரை, பாண்டியன்குப்பம், திம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பா.மோகன், மாநில சா்க்கரைஆலை இணையத் தலைவா் அ.ராஜசேகா், ஒன்றியச் செயலா் அய்யம்பெருமாள், பாமக மாவட்ட துணைச் செயலா் ரமேஷ், மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com