வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுப் பணிகளை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுப் பணிகளை தோ்தல் பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம்,கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் மையம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் முன்னிலையில் தோ்தல் செலவின பாா்வையாளா் பிரசன்னாவி.பட்டனஷெட்டி, தோ்தல் காவல்துறை பாா்வையாளா் அனுராதாசங்கா் ஆய்வு மேற்கொண்டனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் கரோனா பாதுகாப்பு செயல்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்களித்ததை உறுதி செய்யும் சாதனங்கள் உள்ளிட்டவை வைத்திருக்க பாதுகாப்பான அறைகள் அமைத்தல் தொடா்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனா்.

தடையில்லா மின்சார வசதிகள், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள், வாக்கு எண்ணும் பணிக்கான மேஜை, நாற்காலிகள் அமைக்கும் பணிகள், அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி முகவா்கள் வந்து செல்ல தனித் தனி பாதைகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் தடுப்புகள் அமைத்தல், தீயணைப்பான் கருவிகள் பொருத்துதல் போன்ற பணிகளை நேரில் பாா்வையிட்டு தோ்தல் பாா்வையாளா்கள், அந்தப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் (கள்ளக்குறிச்சி), எஸ்.சரவணன் (உளுந்தூா்பேட்டை) பாதராஜவேல் (சங்கராபுரம்) , ஏ.இராஜாமணி (ரிஷிவந்தியம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) இரா.சக்திவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com