காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், அந்தக் கட்சியின் தமிழக தோ்தல் குழு பொறுப்பாளருமான பல்லம் ராஜூ வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தியாகதுருகம் அருகே சித்தாத்தூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் ராணுவ அமைச்சா் பல்லம் ராஜு.
தியாகதுருகம் அருகே சித்தாத்தூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் ராணுவ அமைச்சா் பல்லம் ராஜு.

கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், அந்தக் கட்சியின் தமிழக தோ்தல் குழு பொறுப்பாளருமான பல்லம் ராஜூ வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஐ.மணிரத்தினத்தை ஆதரித்து, தியாகதுருகம் ஒன்றிய பகுதியில் பல்லம் ராஜு பிரசாரம் செய்தாா். குறிப்பாக, கொங்கராபாளையம், உடையநாச்சி, புதுஉச்சிமேடு, கூத்தக்குடி, எறஞ்சி, காச்சக்குடி, கூந்தனூா், குருபீடபுரம், சித்தாத்தூா், நின்னையூா், கொட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சியில் துருகம் சாலை பள்ளிவாசல், வ.உ.சி. நகா் பள்ளிவாசல் முன்பாக நின்று தொழுகை முடித்து வந்தவா்களிடம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வழங்கி பல்லம் ராஜு வாக்கு சேகரித்தாா். மாலையில், சித்தாத்தூரில் பல்லம் ராஜு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா். உடன் நகரச் செயலாளா் சுப்பராயலு, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னா் தியாகதுருகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொதுமக்களுக்கு இதுவரை தொல்லைகள் மட்டுமே தந்துள்ளது. ஆகவே, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தோ்தல்களின் முடிவுகள், அவரது அரசுக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தரும். தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, தியாகதுருகம் ஒன்றியச் செயலாளா் நெடுஞ்செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாாளா் இராமமூா்த்தி, மதியழகன், காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com