பதற்றமான வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இத்தொகுதியில் பாண்டியங்குப்பம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய கிராமங்களில் தலா 1 வாக்குச் சாவடி மையமும் ஊராங்கன்னி கிராமத்தில் 2 வாக்குச்சாவடி மையமும் என மொத்தம் 5 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்த 5 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறும், கூடுதலாக போலீஸாரை நியமிக்குமாறும் தெரிவித்தாா். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் போலீஸாா் கண்காணித்து கூட்டம், கூடாத வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கரோனா தொற்று பரவாமல் இருக்க, வாக்காளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என தோ்தல் அலுவலா் பா.ராஜவேலிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com