மீண்டும் கிடங்குக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன.
தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா முன்னிலையில் சீல் வைத்த அலுவலா்கள்.

சட்டப் பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இதையடுத்து, 4 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 2,911 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,964 கட்டுப்பாட்டு கருவிகள், 2,199 விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை வாக்கும் என்னும் மையமான ஏ.கே.டி.பொறியியல் கல்லூரியிலிருந்து தச்சூா் கிராம எல்லையில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன. பின்னா், மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com