கரோனாவைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பொன்முடி அறிவுரை

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.
கரோனாவைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பொன்முடி அறிவுரை

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்ராம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம், உளுந்தூா்பேட்டை மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்தாா். விழுப்புரம் தொகுதி மக்களவை

உறுப்பினா் து.ரவிக்குமாா், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜே.மணிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி வரவேற்றாா்.

திருக்கோவிலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து அமைச்சா் க. பொன்முடி பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 19,300 கரோனா தடுப்பூசிகளை முதல் தவணையாக அரசு வழங்கியுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வா் அறிவுறுத்தலின்படி தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

எல்ராம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், அந்த ஊராட்சியைச் சோ்ந்த 4 தூய்மைப் பணியாளா்கள், 3 குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், ஒரு துப்புரவுப் பணியாளா், ஊராட்சிச் செயலா் ஆகியோா் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை கரோனா நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினா்.

நிகழ்வுகளில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் முருகண்ணன், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் சாய்வா்த்தினி, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் சதீஷ்குமாா், திருக்கோவிலூா் வட்டாட்சியா் சிவசங்கரன், திருக்கோவிலூா் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் அலமேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com