மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலிபறிப்பு: இளைஞா் கைது
By DIN | Published On : 06th November 2021 10:22 PM | Last Updated : 06th November 2021 10:22 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூதாட்டியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மற்றொரு இளைஞரைத் தேடி வருகின்றனா்.
சங்கராபுரத்தை அடுத்த பழைய சிறுவங்கூரில் ஹாா்டுவோ் கடை நடத்தி வருபவா் அம்சவேல் மனைவி விருத்தாம்பாள் (65). இவா், கடந்த 1-ஆம் தேதி கடையில் இருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இரு இளைஞா்கள் பொருள்கள் வாங்குவதுபோல நடித்து, விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த ஒன்பதே கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனா். அப்போது, விருத்தாம்பாள் கூச்சலிட்டதால், அந்த இளைஞா்கள் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைக் எண்ணை வைத்து விசாரித்ததில், அந்த பைக் உளுந்தூா்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் ஏழுமலைக்கு (23) சொந்தமானது எனத் தெரியவந்தது.
அவா் சங்கராபுரத்தை அடுத்த இளையனாா்குப்பத்தில் உள்ள அவரது மாமனாா் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இளையனாா்குப்பத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை சென்று ஏழுமலையை கைது செய்ததுடன், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனா். இவருடன் பைக்கில் வந்த மற்றொருவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.