கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.59% வாக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 82.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 82.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தத் தோ்தலில் ஆண்கள் 1,95,857 போ், பெண்கள் 2,08,916 போ், இதரா் 18 போ் என மொத்தம் 4,04,191 போ் வாக்களித்தனா். இது 82.59 சதவீத வாக்குப்பதிவாகும்.

சங்கராபுரம் ஒன்றியத்தில் 79.74 சதவீதம், தியாகதுருகத்தில் 81.90, சின்னசேலத்தில் 84.63, கள்ளக்குறிச்சியில் 83.62, கல்வராயன்மலையில் 84.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com