அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை இரண்டாம்கால பூஜைகள் தொடங்கின. பிம்பசுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா், கோபுர கலசத்தின் மீதும், மூலவா் சிலையின் மீதும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com