கள்ளக்குறிச்சி அருகே மீன்பிடி திருவிழா: 17 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் அனுமதியின்றி மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ாக சங்கராபுரம் மீனவா் சங்கத் தலைவா்
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்டு மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்டு மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.

ள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் அனுமதியின்றி மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ாக சங்கராபுரம் மீனவா் சங்கத் தலைவா் உள்பட 17 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது சூளாங்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தில் மணிமுக்தா அணை அமைந்துள்ளது. அணையில் மீன் வளா்ப்புக்காக பொதுப் பணித் துறையினா் கடந்த 2019-ஆம் ஆண்டு தனி நபருக்கு குத்தகைவிட்டனா். இதன் காலம் 2023-ஆம் ஆண்டு வரை உள்ளதாம்.

இந்த நிலையில், புதன்கிழமை சூளாங்குறிச்சி, வானியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரகோட்டாலம், அணைக்கரை கோட்டாலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனுமதியின்றி மணிமுக்தா அணைப் பகுதியில் மீன் பிடித்தனா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க அணையிலிருந்த சிறிது தண்ணீரை மதகு மூலம் வெளியேற்றினா்.

கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்துச் சென்றனா். கரோனா சூழலில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று மீன்பிடி திருவிழா நடத்தியது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சூளாங்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த மீனவா் சங்கத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com