வீடுகள் முன் அதிகாலையில் கிடந்த அரிசி மூட்டைகள்: பறக்கும் படையினா் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் வீடுகளின் முன் கிடந்த அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தியாகதுருகம் ஒன்றியம், பொரசக்குறிச்சி கிராமத்தில் பறக்கும்படையினரால் கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள்.
தியாகதுருகம் ஒன்றியம், பொரசக்குறிச்சி கிராமத்தில் பறக்கும்படையினரால் கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் வீடுகளின் முன் கிடந்த அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். அவை வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டவையா? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடுகளின் முன் வைக்கப்பட்டிருந்த 20 அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக அக்-6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட பொரசக்குறிச்சி கிராமத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வீடுகள்தோறும் அரிசி மூட்டைகள் சிலரால் வைத்துவிட்டுச் செல்லப்பட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வைரக்கண்ணன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தனசேகா், போலீஸாா் ராஜேஷ்பாபு, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அந்த கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் சென்றனா்.

அங்குள்ள தொழிலாளா் நல காலனி பகுதியில் உள்ள வீடுகளின் முன் 25 கிலோ அளவுள்ள 2 அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவா்களை எழுப்பி போலீஸாா் இதுகுறித்து விசாரித்தபோது, அரிசி மூட்டைகளை யாா் வைத்துச் சென்றது என தெரியாது என்றனா்.

இதையடுத்து, வீடுகளின் முன் வைக்கப்பட்டிருந்த 20 அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் கைப்பற்றி, தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், அவை ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டவையா? எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com