பாலிடெக்னிக் மாணவா் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே நெஞ்சு வலி தாங்காமல் விஷப் பொருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலிடெக்னிக் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி அருகே நெஞ்சு வலி தாங்காமல் விஷப் பொருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலிடெக்னிக் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உதயமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வீரமணி மகன் காா்த்திகேயன் (19). இவா், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவரது ஊரில் நடைபெற்ற திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி காா்த்திகேயன் நெஞ்சு வலி தாங்காமல் விஷப் பொருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com