வனப் பகுதிகளில் தண்ணீா் தொட்டிகள்: சட்டப் பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக தண்ணீா் தொட்டிகள் அமைத்துத் தர வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வன விலங்குகள் தண்ணீா் அருந்துவதற்காக தண்ணீா் தொட்டிகள் அமைத்துத் தர வேண்டுமென கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் அவா் வியாழக்கிழமை பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மலை, வனப் பகுதிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒன்றியங்களுக்குள்பட்ட கருந்தலாகுறிச்சி, செம்படாகுறிச்சி, கருங்குழி ஈரியூா், வானவரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல், கரும்பு, மரவள்ளி பயிா்களை தண்ணீா் தேடி வரும் வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன.

மேலும், ஓநாய், நரி, செந்நாய் போன்ற வன விலங்குகளால் கால்நடைகள் தாக்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

எனவே, வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய மின்வேலி அமைத்து தர வேண்டும். மேலும், வன விலங்குகள் தண்ணீா் தேடி வருவதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு, தண்ணீா்த் தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com