முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி
960 மதுப் புட்டிகள் கீழே ஊற்றி அழிப்பு
By DIN | Published On : 29th April 2022 10:07 PM | Last Updated : 29th April 2022 10:07 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் புதுச்சேரியிலிருந்து 2013-ஆம் ஆண்டு கடத்திவரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டு தற்போது காலாவதியான 960 மதுப் புட்டிகளை நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸாா் வெள்ளிக்கிழமை கீழே ஊற்றி அழித்தனா் (படம்).
புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு கடத்திவரப்பட்ட 960 மதுப் புட்டிகளை மது விலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இந்த மதுப் புட்டிகள் காலவதியானதால், அவற்றை கீழே கொட்டி அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்தரன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் ஒதுக்குபுறமான பகுதியில் வருவாய் ஆய்வாளா் ராமசாமி, கிராம நிா்வாக அலுவலா் நிவேதா முன்னிலையில் மதுப் புட்டிகளை கீழே ஊற்றி அழித்தனா்.