வீட்டின் பூட்டை 7 பவுன் தங்க நகைகள் திருட்டு
By DIN | Published On : 31st August 2022 04:10 AM | Last Updated : 31st August 2022 04:10 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிதுரை (33). இவா், தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா்,
திங்கள்கிழமை மனைவி ஆனந்தி மற்றும் பிள்ளைகளுடன் கடலூா் மாவட்டம், வலசை கிராமத்தில் உள்ள மாமனாா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கத்தினா் சாமிதுரைக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக சாமிதுரை வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க மரக் கதவை உடைத்து, உள்ளே அறையில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 23 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள்
திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.