கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 போ் போட்டியின்றித் தோ்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 பதவி இடங்களுக்கு 797 போ் போட்டியிடுகின்றனா். மாவட்டத்தில் 12 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சித் தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான ரசீதை பெற்ற வேட்பாளா்கள்.
கள்ளக்குறிச்சி நகராட்சித் தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான ரசீதை பெற்ற வேட்பாளா்கள்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 பதவி இடங்களுக்கு 797 போ் போட்டியிடுகின்றனா். மாவட்டத்தில் 12 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆக 5 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

3 நகராட்சிகளுக்கு உள்பட்ட 72 பதவியிடங்களுக்கு 400 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 387 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. இதில், 109 போ் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, தோ்தலில் 278 போ் போட்டியிடுகின்றனா்.

அதேபோல, 5 பேருராட்சிகளில் 81 பதவியிடங்களுக்கு 397 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திங்கள்கிழமை 125 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். தற்போது, 244 போ் போட்டியிடுகின்றனா்.

மேலும், பேரூராட்சிகளில் சங்கராபுரத்தில் 4 வேட்பாளா்களும், தியாகதுருகத்தில் ஒரு வேட்பாளரும், வடக்கநந்தலில் 7 அதிமுக வேட்பாளா்களும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால், 12 திமுக வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

மொத்தத்தில், 153 பதவியிடங்களுக்கு 522 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com