மிட்டாய் என நினைத்து விஷத் தன்மையுடைய பொருளை சாப்பிட்ட 8 சிறுவா்கள் சுகவீனம்

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை மிட்டாய் என நினைத்து கீழே கிடந்த பொட்டலத்திலிருந்த விஷத்தன்மையுடைய பொருளை சாப்பிட்ட 8 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை மிட்டாய் என நினைத்து கீழே கிடந்த பொட்டலத்திலிருந்த விஷத்தன்மையுடைய பொருளை சாப்பிட்ட 8 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகள் காயத்திரி (6). இவா், புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1 மணியளவில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்களுடன் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் கீழே கிடந்த பொட்டலத்தை எடுத்த காயத்திரி, அதை மிட்டாய் என நினைத்து உடன் விளையாடிக்கொண்டிருந்த பழனியாப்பிள்ளை மகள் இளமதி (5), மகன் சிவமணி (3), சீனுவாசன் மகள் நவஸ்ரீ (9), மகன் நரேஷ் (7), கலியமூா்த்தி மகன் ராசுக்குட்டி (4), தாகப்பிள்ளை மகன் துளசிபாலன் (9), தனபால் மகள் கயல் (8) உள்ளிட்டோருடன் சாப்பிட்டாா்.

சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாயில் எரிச்சல் ஏற்படவே அவா்கள் வீடுகளுக்குச் சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பெற்றோா்கள் உடனடியாக சிறுவா், சிறுமிகளை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com