வேளாண் துறை திட்டங்கள்: வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், முடியனூா் கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும்
வேளாண் துறை திட்டங்கள்: வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், முடியனூா் கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உழவா் நலத் துறை சாா்பில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுனை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், முடியனூா் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் தங்கராஜ் முன்னிலை வகிததாா். ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பு இளங்கோவன் வரவேற்றாா்.

இதையடுத்து, வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வில்லுப்பாட்டு கலைக் குழுவினா் பாடல்களுடன் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வேளாண் அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், வினோத்குமாா் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளா் சிவபிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com