நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசிதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2022 நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளுக்கு முதல்கட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

மாவட்டத்தில் 8 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள 200 வாக்குச் சாவடி மையங்களுக்கு 20 சதவீதம் கூடுதல் இருப்பை சோ்த்து 242 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை அறிவிக்கும்போது தோ்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் பொருட்டு, முதல்கட்டமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தோ்தல் பணிகளில் அனைத்து நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கொ.மாதேஸ்வரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளா் ந.குமரன், தோ்தல் வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.ஏகாம்பரம் மற்றும் அனைத்து நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com