விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான விதைகள்
By DIN | Published On : 31st July 2022 06:38 AM | Last Updated : 31st July 2022 06:38 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் வட்டார விவசாயிகள் தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடையலாம் என்று வேளாாண்மை உதவி இயக்குநா் தெரிவித்தாா்.
திருக்கோவிலூா் வட்டாரத்தில் போதிய மழை பெய்துள்ளது. இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் விதைப்புப் பணிகளைத் தொடங்கலாம்.
திருக்கோவிலூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல் 11 மெ.டன் சான்று விதைகள், கம்பு 1 மெ.டன் சான்று விதைகள், உளுந்து 18.5 மெ.டன் சான்று விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேவையான உயிா் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்ட உரம் போன்ற இடு பொருள்களும் இருப்பில் உள்ளன.
விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு விண்ணப்பம் அளித்து பயனடையலாம் என்று அலுவலா் சா.மோகன் சகாயராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தராஜ் ஆகியோா் கேட்டுக் கொண்டனா்.
வேளாண் அலுவலா்கள்:
திருக்கோவிலூா் - மகாதேவன் 9659632749, வேங்கூா் - மைக்கேல் 96555 58404, காட்டு பையூா் - ஜெயபிரகாஷ் 95002 61968, மாடாம்பூண்டி - ஜெயபிரதா 97876 45645, சோழவாண்டிபுரம் - விஜயகுமாா் 97876 645465, மணலூா்பேட்டை - ஞானவேல் 96262 77327