விஷ வண்டு கடித்ததில் ஊரக வேலைத் திட்ட தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே விஷ வண்டு கடித்ததில் தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளி உயிரிழந்தாா்
விஷ வண்டு கடித்ததில் ஊரக வேலைத் திட்ட தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே விஷ வண்டு கடித்ததில் தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தியாகை ஊராட்சியில் மரக்கன்று நடுவதற்காக, அங்குள்ள பெரியாயி கோயில் அருகே அதே கிரமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, அவரை விஷத் தன்மையுடயை வண்டு கடித்ததாம். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உடனடியாக ஆறுமுகத்தை தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com