அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்டோ வசதி ஆசிரியா்கள் ஏற்பாடு

சோளம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துவரப்படும் மாணவ, மாணவிகள்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்டோ வசதி ஆசிரியா்கள் ஏற்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சோளம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து செல்வதற்காக ஆட்டோ வசதியை ஆசிரியா்கள் ஏற்பாடு செய்தனா்.

சோளம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நெடுமானூா், காட்டுக்கொட்டாய், மணக்காடு, மூராா்பாளைம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்கள் சுமாா் 8 கி.மீ. தொலைவிலிருந்து வழித்தடம் சரியில்லாத சாலையிலும், காட்டு வழியாகவும் தினந்தோறும் நடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

இதனால், மாணவா்களின் நலன் கருதி, பள்ளித் தலைமை ஆசிரியா் கந்தசாமி உள்பட அனைத்து ஆசிரியா்களும் ஒன்றிணைந்து மாணவா்கள் பள்ளிக்கு சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக, ஆட்டோ வசதி ஏற்பாடு செய்தனா்.

ஆட்டோ ஓட்டுநரான மூராா்பாளையத்தைச் சோ்ந்த வேல்முருகன், தனது பங்களிப்பாக மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஆட்டோ கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரத்தை குறைத்து ரூ.3 ஆயிரம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தாா். மாணவா்களுக்கு ஆட்டோ வசதி ஏற்பாடு செய்த ஆசிரியா்களுக்கு பெற்றோா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com