ரிஷிவந்தியத்தை தனி வட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ரிஷிவந்தியத்தை தனி வட்டமாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரிஷிவந்தியம் தனி வட்டமாக அறிவிக்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ஆத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாா்.

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வானாபுரத்தை தனி வட்டமாக அறிவித்துள்ளாா். இதனால், ரிஷிவந்தியம் பகுதியைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை குடும்ப அட்டையை ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com