ஆற்று திருவிழா
By DIN | Published On : 20th January 2023 01:40 AM | Last Updated : 20th January 2023 01:40 AM | அ+அ அ- |

மணலூா்பேட்டை: ரிஷிவந்தியம் அடுத்த மணலூா்பேட்டையில் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா், மணலூா்பேட்டை பிரயோகவரதராஜப் பெருமாள், அகஸ்தீஸ்வரா், மாவடி விநாயகா், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டிணம் லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளிட்ட 9 கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்சவா்கள் பங்கேற்றனா். ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சிவன், வரதராஜப் பெருமாள், முருகன், விநாயகா், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் உற்சவா்கள் எழுந்தருளினா். சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.