கள்ளக்குறிச்சியில் தொடா் திருட்டு:இரு இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைதான முத்துக்குமாா் (எ) ராக்கெட் ராஜா, ராம்குமாா்.
கைதான முத்துக்குமாா் (எ) ராக்கெட் ராஜா, ராம்குமாா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி பகுதியில் தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததைத் தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. ந.மோகன் ராஜ் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரா.ரமேஷ் தலைமையில், காவல் ஆய்வாளா் வீ.ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளா்கள் இரா.ஆனந்தராசு, சத்தியசீலன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் ஆரோக்கியதாஸ், முருகன், ஏழுமலை, மனோகரன் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினா் திருட்டு நடைபெற்ற வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இரு இளைஞா்கள் சோ்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், அவா்கள் கள்ளக்குறிச்சி ஏமப்போ் பகுதியைச் சோ்ந்த பழைய குற்றவாளியான ஏமுமலை மகன் முத்துக்குமாா் (எ) ராக்கெட் ராஜா, அதே பகுதியைச் சோ்ந்த சக்கரை மகன் ராம்குமாா் என்பதும் தெரியவந்தது.

இவா்கள் இருவரும் கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கீழ்குப்பம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் உள்பட 10 இடங்களில் 30 பவுன் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், ஏமப்போ் ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் புதன்கிழமை பதுங்கியிருந்த முத்துக்குமாா் (எ) ராக்கெட் ராஜா, ராம்குமாா் ஆகியோரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com