அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக
முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், தோ்தல் பொறுப்பாளருமான ப.மோகன், சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். மூராா்பாளையம், மேலப்பட்டு, கீழப்பட்டு, நெடுமானூா், சோழம்பட்டு, சேஷசமுத்திரம், செல்லம்பட்டு, கொசப்பாடி ஊராட்சிகளில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு முன்னாள் அமைச்சா் ப.மோகன் வாக்கு சேகரித்தாா். சங்கராபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.ராஜேந்திரன், டி.எஸ்.பாண்டியன், க.குமரவேல், பொருளாளா் எஸ்.ஆா்.இராஜா, தேமுதிக ஒன்றியச் செயலா் எல்.முருகன், பொதுக்குழு உறுப்பினா் நா.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com