பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே திங்கள்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மைக்கேல்புரம் கிராமத்தைச் சோ்ந்த மைக்கேல் மகன் ஸ்டீபன்ராஜ் (26). இவா், திங்கள்கிழமை பிற்பகல் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். மூங்கில்துறைப்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ஸ்டீபன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் பேருந்து ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வேடந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் அய்யாசாமி (48) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com